IPL 2024 Auctions | அபார ஸ்ட்ரைக் ரேட் - ரூ.8.4 கோடிக்கு இளம் பேட்டரை வாங்கிய சிஎஸ்கே!

IPL 2024 Auctions | அபார ஸ்ட்ரைக் ரேட் - ரூ.8.4 கோடிக்கு இளம் பேட்டரை வாங்கிய சிஎஸ்கே!
By: TeamParivu Posted On: December 19, 2023 View: 56


சென்னை
ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் சமீர் ரிஸ்வி என்ற அறிமுகமில்லாத இளம் வீரரை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலத்தின் 6வது செட்டில் சர்வதேச போட்டியில் அறிமுகமில்லாத பேட்டர்கள் ஏலம் விடப்பட்டனர். இந்த சுற்றில் முதல் வீரராக சுபம் துபே
அடிப்படை தொகையான இருபது லட்சத்துக்கு ஏலத்திற்கு விடப்பட்டார். அவரை ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே கடும் போட்டியிட்ட நிலையில் இறுதியில் ரூ.5.8 கோடிக்கு சுபம் துபேவை கைப்பற்றியது ராஜஸ்தான். இதேபோல் இதேபோல் மற்றொரு இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இருபது லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில் சமீர் ரிஸ்வியை கைப்பற்ற சென்னை, டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி 9 டி20 போட்டிகளில் விளையாடி 189 ஸ்ட்ரைக் ரேட் உடன் 455 ரன்கள் குவித்துள்ளார்.
அங்கிரிஷ் ரகுவன்ஷியை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கிய கொல்கத்தா அணி. அர்ஷின் குல்கர்னியை லக்னோ அணி ரூ.20 லட்சத்துக்கு கைப்பற்றியது. அதேநேரம் உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் சர்ப்ராஸ் கானை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதேபோல் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த ராஜ் அங்கத் பாவாவையும் எந்த அணிகளும் வாங்கவில்லை. கடந்த முறை பஞ்சாப் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ஷாருக் கானை இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. 40 லட்ச ரூபாயில் தொடங்கிய ஏலத்தில் ரூ.7.40 கோடி கொடுத்து குஜராத் அணி ஷாருக் கானை வசப்படுத்தியது. ராமன்தீப் சிங் ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நிர்வாகம் வாங்கியது.
டாம் கோஹ்லர்-காட்மோரை ரூ.40 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. ரிக்கி புய் என்ற இளம் விக்கெட் கீப்பரை டெல்லி அணி ரூ.20 லட்சத்துக்கு வசப்படுத்தியது. ஜார்கண்ட் மாநிலத்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குமார் குஷாக்ரா இந்த ஏலத்தில் கவனம் ஈர்த்தார். அதிரடியாக விளையாடும் இவரை ரூ.7.20 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் வாங்கியது. இடதுகை வேகப்பந்து வீச்சாளரான யஷ் தயாளை ஆர்சிபி ரூ.5 கோடிக்கு வசப்படுத்தியது. இதேபோல் சுஷாந்த் மிஸ்ராவை ரூ.2.20 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகாஷ் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு கைப்பற்றியது. கார்த்திக் தியாகியை ரூ.60 லட்சத்துக்கு குஜராத் அணி வாங்கியது. இந்த செட்டின் கடைசி வீரரான ராசிக் தர்ரை ரூ.20 லட்சத்துக்கு டெல்லி அணி வசப்படுத்தியது.
முக்கிய அம்சங்கள்:
  • விபத்தில் சிக்கி கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதல்முறையாக இந்த ஏலத்தில் கலந்துகொண்டார்.
  • ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடுமையான போட்டிக்கு பிறகு ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில மணித்துளிகளில் அதனை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க்.
  • ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு வாங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
  • உலகக் கோப்பையில் சிறப்பாக ஆடிய நியூஸிலாந்து வீரரான டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கியுள்ளது.
  • ராயல் சேலஞ்சர்ஸ் அணி மேற்கிந்திய தீவு வீரர் அல்சாரி ஜோசப்பை 11.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
  • இந்திய வேக பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலுக்கு இம்முறை ஏலத்தில் அதிக டிமாண்ட் இருந்தது. ரூ.2 கோடி அடிப்படை விலையில் தொடங்கி, ரூ.11.75 கோடிக்கு பஞ்சாப் அணி அவரை வாங்கியது.
  • முதல் வீரராக மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மன் பவல் ஏலம் விடப்பட்டார். ரூ.1 கோடியில் தொடங்கி ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்கியிருக்கிறது.
  • தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கானை ரூ.7.40 கோடி கொடுத்து வசப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ்.
  • ஷிவம் மவியை ரூ.6.8 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
  • உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட்டை ரூ.6.8 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹெட்டிற்காக கடுமையாக போராடிய நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அவரை ஏலத்தில் வென்றது.
  • இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் உமேஷ் யாதவை குஜராத் டைட்டன்ஸ் அணி 5.80 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
  • உலகக் கோப்பையில் இலங்கை அணி சார்பில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்காவை 4.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
  • கிறிஸ் வோக்ஸ் ரூ.4.2 கோடிக்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.
  • இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியது.
  • இந்திய அணியின் ஆல் ரவுண்டர் வீரர் ஷர்துல் தாகூரை ஏலத்தில் 4 கோடிக்கு மீண்டும் வாங்கியிருக்கிறது சென்னை அணி.
  • உலகக் கோப்பை தாக்கத்தை ஏற்படுத்திய நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை ரூ.1.8 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டை ரூ.1.60 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியது.
  • இலங்கை அணி வீரர் வனிந்து ஹசராங்காவை அடிப்படை விலையான 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வாங்கியது.
  • சேத்தன் சக்கரியாவையும், கேஎஸ் பரத்தையும் கொல்கத்தா நிர்வாகம் தலா ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது.
  • டிரிஸ்டன் ஸ்டப்ஸை டெல்லி கேபிட்டல்ஸ் ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது.
  • ஆப்கன் பேட்ஸ்மேன் அஸ்மத்துல்லா உமர்சாயை ரூ.50 லட்சத்துக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது.
  • இந்திய இளம் வீரர் சுபம் துபேவை ரூ.5.8 கோடிக்கு கைப்பற்றியது ராஜஸ்தான்.
  • மற்றொரு இந்திய இளம் பேட்ஸ்மேன் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடி கொடுத்து வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
  • அங்கிரிஷ் ரகுவன்ஷியை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு வாங்கிய கொல்கத்தா அணி.
  • ராமன்தீப் சிங் ரூ.20 லட்சத்துக்கு கொல்கத்தா நிர்வாகம் வாங்கியது.
  • Unsold வீரர்கள்: இந்திய வீரர்கள் மனீஷ் பாண்டே, கருண் நாயர், ஆஸி வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
  • ஆப்கன் வீரர் முஜீப் ரஹ்மானை எந்த அணியும் வாங்கவில்லை. அவரின் அடிப்படை விலை ரூ.2 கோடி. மற்றொரு ஆப்கன் வீரர் முகமது வக்கார் சலாம்கெயில் UNSOLD வீரரானார்.
  • நியூஸிலாந்து ஸ்பின்னர் இஷ் சோதியை அணிகள் வாங்கவில்லை.
  • இலங்கை கீப்பர் குஷல் மெண்டிஸை அணிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
  • இங்கிலாந்து நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷீத்தை எந்த அணியும் வாங்கவில்லை.
  • மேற்கிந்திய தீவு வீரர் அகேல் ஹுஸைனை UNSOLD வீரரானார்.
  • இங்கிலாந்து கீப்பர் பிலிப் சால்ட்டை எந்த அணியும் வாங்கவில்லை.
  • ஆஸியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட்டை எந்த அணியும் வாங்கவில்லை.
  • உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் சர்ப்ராஸ் கானை எந்த அணியும் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
  • 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பை வெல்ல காரணமாக இருந்த ராஜ் அங்கத் பாவாவையும் எந்த அணிகளும் வாங்கவில்லை.
  • தென் ஆப்பிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சியின் அடிப்படை விலை ரூ.50 லட்சம் என அறிவிக்கப்பட்டது. எனினும் அவரை அணிகள் வாங்க விரும்பவில்லை.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..